கனடாவில் இனவெறித்தாக்குதல்! தப்பி ஓடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி?

south-gate
The attack happened in the parking lot outside the Southgate shopping mall in Edmonton, police say. (Google Street View)

கனடாவில், அல்பெர்ட்டா மாகாணத்தில், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று , எட்மண்டன் பகுதியில் ஒரு சோமாலிய நாட்டை சேர்ந்த பெண்ணின் தாயும், அப்பெண்ணும் கொடூரமான இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்கள்.

காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவலின் படி, சவுத்கேட் சென்டர் வாகன நிறுத்துமிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வருகிறது.

இந்த இரு பெண்கள் தங்கள் காரில் அமர்ந்திருந்தபோது, ஒரு நபர் அவர்களை அணுகியதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஹிஜாப் எனப்படும் உடலை மறைக்கும் உடல்மறைப்பு ஆடை  அணிந்திருந்தனர்.

அந்த நபர் காரின் ஜன்னல் வழியாக குத்தியது மட்டுமல்லாது, காரின் முன்பு நின்றுகொண்டு பெண்களிடம் இனவெறியுடன் ஆபாசமாக கத்த ஆரம்பித்தார்.

பயணிகள் இருக்கையில் இருந்த பெண், அதனை பார்த்து பயந்து காரில் இருந்து இறங்கி ஓடினார். ஆனால், அந்த நபர் பெண்ணை துரத்திச் சென்று தரையில் தள்ளி அவரைத் தாக்கினான்.

மற்ற பெண் உதவ முயன்றார். ஆனால், அருகிலுள்ள சாட்சிகள் தலையிட்டு தாக்குதலை நிறுத்துவதற்கு முன்பு அவளும் தரையில் தள்ளப்பட்டாள்.

சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களால் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த பெண்கள் மீதான தாக்குதல் கொடூரமானது என்று சார்ஜென்ட் கூறினார். கனடாவின் குற்றவியல் தொகுப்புச் சட்டப் பிரிவின் கீழ்  அதிகரித்த தண்டனையை வழங்க பரிசீலிப்பதாக கூறினார்.

41 வயதான அந்த நபர் மீது இரு தாக்குதல்கள் மற்றும் விதி மீறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படியுங்க: மிக கவனம்! கனடாவில் ஒரே இரயில் மீது இரு வெவ்வேறு இடங்களில் மோதிய வாகனங்கள்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.