மிக கவனம்! கனடாவில் ஒரே இரயில் மீது இரு வெவ்வேறு இடங்களில் மோதிய வாகனங்கள்!

RCMP
Pembina Valley RCMP say the same train was involved in two crashes with vehicles near Winkler Tuesday. A 53-year-old man driving this vehicle survived with non-life threatening injuries, police say. Submitted/RCMP

கனடாவில் 2 மணி நேர இடைவெளியில் ஒரே ரயில் மீது வெவ்வேறு இடங்களில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

ஒரேயொரு நிமிடம் ஓட்டுனர் பொறுமையாக இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது.

ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும்போது, ரயில் வருவதைப் பார்த்தாலோ அல்லது ரயிலின் ‘ஹாரன்’ சத்தம் கேட்டாலோ லெவல் கிராசிங்கை கடந்து போகவே கூடாது. ரயிலின் வேகத்தை மக்களே மதிப்பிடக்கூடாது.

ஆளில்லா லெவல் கிராசிங்கை நடந்து கடப்பவர்கள் பதற்றத்தில் தண்டவாளத்தில் இடறி விழுந்தாலோ, மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது வாகனம் நடுவழியில் நின்றுவிட்டாலோ சில வினாடிகளில் உயிரைவிட நேரிடும்.

பகல் நேரங்களில் நாம் தண்டவாளத்தைக் கடப்பதை ரயில் இன்ஜின் டிரைவர்தான் பார்க் கிறாரே, ரயிலை நிறுத்திவிடுவார் அல்லது ரயிலின் வேகத்தைக் குறைத்துவிடுவார் என்று நினைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கை கடப்பது பெரும் தவறு.

வேகமாக வந்து கொண்டிருக்கும் ரயிலை இன்ஜின் டிரைவரே நினைத்தாலும் திடீரென நிறுத்த முடியாது.

நினைத்தவுடன், நினைத்த மாத்திரத்தில் ரயிலை நிறுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் கவனக்குறைவாக வாகனம் இயக்கியதில் கனடாவில் Manitoba பகுதியில், Winkler என்ற இடத்துக்கு கிழக்கே உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங் ஒன்றில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ரயில் ஒன்றின் மீது மோதியது.

அதில் பல முறை உருண்டு விழுந்துள்ளது. வாகனத்தில் பயணித்த 53 வயது நபர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை.

இந்த விபத்து நிகழ்ந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின், Winkler என்ற இடத்துக்கு மேற்கே உள்ள ரயில்வே கிராஸிங் ஒன்றில் வேகமாக வந்த வாகனம் ஒன்று அதே ரயில் மீது மோதியுள்ளது.

அந்த வாகனம் பள்ளம் ஒன்றில் விழுந்த நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிய 19 வயது பெண்ணுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த விபத்துகள் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: கனடாவின் முக்கிய மாகாணத்தில் அமலுக்கு வந்த புதிய தடை! குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் நீடிக்கும் அபாயம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.