கனேடிய மக்களுக்கு நம்பிக்கை இல்லையா? நானே கொரோனா தடுப்பூசி போடத்தயார் – துணை பிரதமர்!

Chrystia Freeland

கனடா 20 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான ஒப்பந்தத்தை  பைஸர் நிறுவனத்திடம் மேற்கொண்டிருந்தது.

அது மட்டுமின்றி எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை 56 மில்லியனாக அதிகரிக்க செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அறிவித்துள்ளார்.

பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை  மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விரையில் அனைத்து முன்களப் பணியாளர்களும் விரையில் பெறப்போகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனடாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் மிக விரைவில் தொடங்கும். அதிகமான மக்கள் அதைப் பெறுவது சிறந்த முடிவுகளைத் தரும் என துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சாத்தியமான சந்தேகங்களுக்கு முகங்கொடுத்து, கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தடுப்பூசியை தானே பகிரங்கமாக எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்ப்படுத்த  நான் இதைச் செய்வேன் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எந்தவொரு தடுப்பூசியின் முதல் அளவுகளும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் பேசிய ஃப்ரீலேண்ட், மிகவும் தகுதியான நபர்களை விட நான் முக்கியமானவர் அல்ல என்று கூறினார்.

இதையும் படியுங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கனடாவில் 10 இலட்சம் மக்களை பலிவாங்கிய நோய் மீண்டும் பரவுகிறது!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.