அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கனடாவில் 10 இலட்சம் மக்களை பலிவாங்கிய நோய் மீண்டும் பரவுகிறது!

Bartonella quintana
Bartonella quintana affected Leg

கனடாவில் முதல் உலகப்போர் காலகட்டத்தில் பரவிய நோய் ஒன்று தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1915 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின்போது அகழிகளில் மறைந்திருக்கும் போர் வீரர்களுக்கு சீலைப்பேன் என்னும் பூச்சி மூலம் அகழிக்காய்ச்சல் நோய் பரவியது.

இந்திய நோயின் தாக்கத்தால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் பலியானார்கள். அந்த நோயானது தற்போது Manitoba நகரில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடில்லாமல் தெருவில் வசித்து வரும் நான்கு பேருக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bartonella quintana என்ற கிருமிகளால் உண்டாகும்  இந்த நோய், சீலைப் பேன்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு மீண்டும் மீண்டும் காய்ச்சல் வரும் மேலும் உடல் வலி, தலை வலி, உடலில் புள்ளிகள் முதலானவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

கனடாவில் இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகழிக்காய்ச்சல் நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் பரவல் கண்டறியப்பட்டது மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையில் சிக்கிய கனடா, அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்த நேரத்தில் புது வகையான நோய் தாக்கம் இணைந்து கொண்டால், இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர் கொள்வது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இதனை உணர்ந்து கொண்டு மக்கள், அரசு வழிகாட்டும் சுகாதார நெறிமுறைகளை கடைபிடித்து வந்தாலே, இது போன்ற நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இதையும் படியுங்க: கனடாவில் கொரோனா பதிப்பு தீவிரம்! மீண்டும் பொது முடக்கத்தை எதிர்கொள்ளப்போகும் பிராந்தியம்?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.