கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சருக்கு கொரோனா உறுதி

Corona virus in canada covid 19
Image Credit: CBC

கனடாவில் மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மார்டா மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனைகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கனடாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்டா மோர்கனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிக்கிய கனடா மக்களுக்கு அரசு எச்சரிக்கை – போலிகளை நம்பி ஏமாற வேண்டாம்

கனடா தலைநகரான ஒட்டாவாவில் கடந்த ஜன.,8 2020 ல் தேசிய பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்த கூட்டத்தில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மார்டா மோகன் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் மார்க் கார்னியோ ஆகயோரும் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து, குடிவரவுத்துறைக்கு பின் கடந்த ஒரு வருடத்திற்குள் வெளியுறவுதுறை துணை அமைச்சராக பொறுப்பேற்றவர் மார்டா மோகன். இந்த பணியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையும் மார்டாவை சேரும். தற்போது அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் இந்த கொரோனா பாதிப்பு குறித்து தனது டுவிட்டரில், கொரோனா பாதித்த அமைச்சர் மோர்கன் விரைவில் நலமுடன் முழுமையாக மீண்டு வர வேண்டும். அவர் வெளியுறவுத்துறையின் சிறந்த துணை அமைச்சர். இதையொட்டி நாட்டில் உள்ள பல அமைச்சர்கள் தங்களுக்கு சுவாச நோய்இருப்பதால் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். ஆனால் மோர்கன் கனடா அரசின் தொற்றை உறுதி செய்த மூத்த அதிகாரி என்று கூறப்படுகிறது என்று கூறினார்.

ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் அமைச்சர் ஷாம்பெயின், லாட்வியா, உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். பின் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு முடிவு எதிர்மறையாக வந்தது. கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.