இந்தியாவில் சிக்கிய கனடா மக்களுக்கு அரசு எச்சரிக்கை – போலிகளை நம்பி ஏமாற வேண்டாம்

canadian in india rescue roca covid 19

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பே, இந்தியா வந்த கனடா மக்கள் எதிர்பாராத இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவில் சிக்கினர்.

இவர்களை தாய்நாட்டுக்கு கொண்டுச் செல்ல இரு நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சிறப்பு விமானங்கள் மூலம், இந்தியாவில் சிக்கியுள்ள கனடா மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டரில் இருந்து நான்காவது சிறப்பு விமானம் இன்று கனடா மக்களை ஏற்றிச் சென்றது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வருவதாக இணைய தளங்களில் வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தூதரகம் எச்சரித்துள்ளது.

மோசடிகளில் இருந்து ஜாக்கிரதை! மோசடி செய்பவர்கள் எங்கள் அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்யலாம். போலி சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களால் ஏமாற வேண்டாம். எல்லா தகவல்களையும் சரிபார்க்கவும். ஏதேனும் மோசடி நடவடிக்கை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், India.Consular@international.gc.ca
என்ற ஐடிக்கு தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.