டெல்டா மாறுபாடு வைரஸ் தொற்றினை எதிர்த்து போராட தடுப்பூசி மருந்து சிறந்தது – தெரசா டாம்

canada-watching-covid-19-surge

கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்படுகின்றன. கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்கள் தடுப்பூசி சான்றிதழை பெற முடியும்.

கனடிய மக்களை அச்சுறுத்தி வரும் டெல்டா மாறுபாடு வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மருந்துகளை தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது .

தகுதியுள்ள அனைத்து கனடியர்களும் covid-19 வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு 80 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரசா டாம் கூறினார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் “டெல்டா மாறுபாடு வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடும் வகையில் தடுப்பூசி மருந்து போடப்படுவதால் தடுப்பூசி மருந்துகளின் தேவையை அதிகரித்துள்ளது ” என்று மருத்துவர் தெரசா கூறினார்.

பெரும்பான்மையான மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் முழுமையாகப் பெற்றுக் கொண்டதால் வைரஸ் தொற்று நோய்க்கான முடிவு கோடு வந்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. கனடாவில் போதுமான மக்கள் தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்டால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை. அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி மருந்தை விரைவாக பெற்றுக்கொள்வது நல்லது என்று தெரசா கூறினார்.