டெல்டா மாறுபாடு எச்சரிக்கை -டொரன்டோ நகர ஊழியர்களுக்கு ஜான் டோரி வலியுறுத்தல்

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

டொரன்டோ போன்ற கனடாவின் பல்வேறு நகரங்களிலும் covid-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் நகர மக்களுக்கு விரைவாக வழங்கப்படுகின்றன. அலுவலகங்கள் பொது இடங்களில் பணிபுரிபவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து மற்றும் தடுப்பு ஊசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொரன்டோ நகர ஊழியர்கள் covid-19 க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாதத்தின் கடைசியில் அமலுக்கு வரும் புதிய தடுப்பூசி மருந்து கொள்கை வெளிப்படுத்தும் படிவத்தை நிறைவு செய்யவில்லை. ஏறத்தாழ 24,000 நகர ஊழியர்கள் அதாவது 88 சதவீதம் தடுப்பூசி நிலையை வெளிப்படுத்தும் படிவங்களை பூர்த்தி செய்துள்ளனர் .மற்ற 5 சதவிகிதம் ஊழியர்கள் பகுதி அளவு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் என்று வெள்ளிக்கிழமை டொரண்டோ நகரம் தெரிவித்தது.

எட்டு சதவீதத்தினர் covid-19க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் சுமார் 783 பேர் அவர்களின் தடுப்பூசி நிலையை வெளிப்படுத்த மறுத்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது.

நான்காவது அலையை எதிர்த்து போராடும் விதமாக இந்த மாத இறுதிக்குள் குறைந்த பட்சம் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் முழுமையாக பெற்று இருக்க வேண்டும் என்று டொரண்டோ நகரம் வலியுறுத்தியுள்ளது.

டொரன்டோ நகரில் பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க இந்தத் திட்டமானது மிகச் சரியானது என்று முதல்வர் ஜான் டோரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்டா மாறுபாட்டிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த கொள்கையானது covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்வது என்று குறிப்பிட்டுள்ளார்.