வீட்டை விட்டு வர வேண்டாம்! கனடாவில் மீண்டும் பொதுமக்களுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள்!

British Columbia
Parts of British Columbia were

வீட்டில் தங்கி இருக்கும் மற்றும் தனிமைப்படுத்தி கொள்ளுதல் போன்ற உத்தரவை நீடிக்கும் முடிவினை ஒன்டாரியோ அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.

மாகாணத்தின் பொது சுகாதார அதிகாரிகளினால் இதற்கான வலியுறுத்தல் அரசாங்கத்திடம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசரநிலை ஊரடங்கு அமலில் இருக்கின்றன.

இந்நிலையில் பல்வேறு பாடசாலைகளும் மூடப்பட்டு இணைய வகுப்புகளை பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் உத்தரவை நீட்டிக்கும் முடிவு குறித்து அறிவித்தலை அடுத்த வாரம் முதல்வர் டார்க் போட் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வார விடுமுறையில் தனது அமைச்சரவை உடன் பிரதமர் வெளியிட்ட வீடியோ குறித்து முதல்வரான போர்டு விவாதிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

வீட்டிலேயே தங்கி இருக்கும் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்த உத்தரவானது மாகாணம் முழுவதும் பிப்ரவரி 16ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பதையும் தெரிவித்துள்ள ஒன்றாகும்.

ஒன்டாரியோ டொரன்டோ மற்றும் ஒக் வில் போன்ற பகுதிகளில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நீட்டிப்பு என்பதையும் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ வின் வீட்டில் தங்கும் நிலையானது இந்த மாத 9ஆம் தேதி அன்றே நிறைவடைகிறது.

எனவே மீதமுள்ள ஊரடங்கு நாட்களை மக்கள் அரசு விதிக்குட்பட்ட படியும் பாதுகாப்பான முறையிலும் கழித்துக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருவதை புள்ளி விவரத்தின் படி தெரியவந்துள்ளது.

விரைவில் மக்கள் அனைவரும் கனடாவில் இயல்புநிலைக்கு திரும்பும் நிலை ஏற்படும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்க: காலநிலையும் ஒத்துழைக்கவில்லை – கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் நேரத்தில் கனடாவிற்கு காத்திருக்கும் சவால்!