காலநிலையும் ஒத்துழைக்கவில்லை – கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் நேரத்தில் கனடாவிற்கு காத்திருக்கும் சவால்!

corona canada
cp24

அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா தடுப்பூசி வழங்குவதில் இடையூறுகள் நிகழும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக கனடிய அரசு வேறு சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு திட்டமிட்டு வருகிறது.

கனடாவில் தொற்றின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு கனடா அரசு அஸ்றோ செனிகா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ஆனது ஜூன் மாத இறுதிக்குள் கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும் என்று முனைப்பில் உள்ளது.

பிரதமர் உரையில் பிழை :

கனடாவில் அவசரநிலை ஊரடங்கு நீடித்து வருகின்ற நிலையில்  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் 20 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் இருப்பதாக பிரதமர் கூறிய வீடியோவினை பார்த்த மத்திய அரசானது பிரதமர் கூறியது தவறு என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் என்று நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார்.

பனிக்காலமும் தொற்று பரவலும் :

கனடாவில் கடும் பனிக்காலம் நிகழ்கின்ற சூழ்நிலையில் நோய்த் தொற்றானது மிக அதிக வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில் தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதில் இடையூறுகள் நிகழ்ந்து வருவதால் கனடா அரசு தொற்றினை கட்டுப்படுத்துவதில் சில சவால்களை சந்திக்கும் நிலையில் உள்ளது.

தடுப்பூசி வழங்குவதில் சிறு தடுமாற்றம் இருப்பினும் அதனை மிக விரைவில் சரி செய்து மீண்டு வருவோம் என்று கனடா அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இதையும் படியுங்க: கனடிய பொருளாதாரத்தில் பெரும் வேலை இழப்பு – இதுவரை இல்லாத சிக்கலை எதிர்கொள்ளப் போகும் மக்கள்!