கனடாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கிய நேரத்தில் எழுந்துள்ள கேள்வி!

Zain Chagla
Zain Chagla

கனடாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்கிய நிலையில், மருந்தின் செயல்திறன் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் மாஸ்க் அணிய வேண்டுமா? சமூக இடைவெளியை பின்பற்றவேண்டுமா? என்ற கேள்வி கனேடிய மக்களால் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இதற்கு ஒன்ராறியோ தொற்று நோயியல் மருத்துவரான Zain Chagla பதிலளித்து பேசியுள்ளார்.

ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக  நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதனால்தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும், அனைவரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல் முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

இந்த கேள்விக்கு டொராண்டோவை சேர்ந்த இன்னொரு மருத்துவரான Dr. Tasleem Nimjee பதிலளித்து பேசுகையில், கனடாவில் இப்போது தடுப்பூசி திட்டம் தொடங்கிவிட்டது.

ஆகவே எல்லோரும் மாஸ்குகளை கழற்றிவிடலாம் என்பது போன்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

படிப்படியாக தடுப்பூசி போடப்பட இருக்கும் நிலையில், மாஸ்குகளை தவிர்த்தல் போன்ற செயல்களும் படிப்படியாக மட்டுமே குறைக்கப்படும்.

மொத்தத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களானாலும், இதுவரை தடுப்பூசி போடாதவர்களானாலும், இப்போதைக்கு மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல் முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நன்மை பயக்கும்.

இதையும் படியுங்க: கனடாவில் இன்று குளிர்கால புயலை எதிர்கொள்ளும் மாகாணம்! வெளியான முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.