கனடாவில் இன்று குளிர்கால புயலை எதிர்கொள்ளும் மாகாணம்! வெளியான முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

Weather
Weather Alert Toronto

கனடா வானிலை மையம் வெளியிட்ட தகவலில், குளிர்கால புயலின் தாக்கத்தால் புதன்கிழமை ஒன்ராறியோ மாகாணத்திற்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கக் கூடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த பனிபொழிவின் தாக்கமானது, வாகன ஓட்டிகளின் பயணத்தை பாதிக்கும் அளவுக்கு கனமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஓட்டுநர்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்த சீதோஷ்ண நிலை காரணமாகபல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது.

இது வாகன ஓட்டிகளுக்கு நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பிராந்தியங்களில் இரண்டு முதல் ஐந்து சென்டி மீட்டர் வரையில் மிகக்குறைவாக பனிப்பொழிவு காணப்படும்.

இந்த பனிப்புயல் கிரேட்டர் டொராண்டோ பகுதியின் சில இடங்கள் வழியாகவும், ஒன்றாரியோ ஏரியின் மேற்கு முனையிலும் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வெப்பநிலை தொடர்ந்து உறை நிலைக்கு கீழே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ச

மீபத்திய வானிலை நிகழ்வுகளை பார்த்தால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பனி மூடப்பட்ட நிலையில் கொண்டாட வேண்டி இருக்கும் என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க: கனடிய மக்களின் கடன் சுமை திடீர் அதிகரிப்பு! Statistics Canada பகிரங்கப்படுத்திய தகவல்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.