ஏடிபி கோப்பை டென்னிஸ்: கனடா அபார வெற்றி!

Canada ATP Tennis
Canada ATP Tennis

ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரில் கனடா தனது முதல் ஆட்டத்தில் ஆதிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

24 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று(ஜன.3) தொடங்கியது.

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக்கில் இருந்து கனடா மக்கள் வெளியேற அரசு அறிவுறுத்தல்

பிரிஸ்பனில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் கனடா 3-0 என்ற கணக்கில் கிரீஸை பந்தாடியது. பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் மைக்கேல் பெர்வோலராகிஸையும், டெனிஸ் ஷாபோலோவ் 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸையும் தோற்கடித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் டெனிஸ் ஷாபோலோவ், பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிக எளிதாக சிட்சிபாஸ், மைக்கேல் பெர்வோலராகிஸ் ஜோடியை வென்றது.

கனடா செல்ல Temporary Resident Visa விண்ணப்பிப்பது எப்படி? – முழு விவரம் இதோ