canada economy: பலத்த அடி வாங்கிய கனடா பொருளாதாரம் – ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன ஆனது தெரியுமா?

canada economy
canada economy

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை தொடர்ந்து, கனடாவில் பிறப்பிக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருளாதாரம் மிகப் பெரிய  வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது தெரிய வருகிறது.

நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிட்டிவ் கணிப்பின் படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.6 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்த மாகாணங்களில் மட்டும், 1 மாதமாக எவருக்கும் கொரோனா தொற்று இல்லை! எவை அவை..?

இதற்கு முன்னதாக மார்ச் மாதத்தில் 7.5 சதவீதம் சரிவு ஏற்பட்டது. அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்பட்டதன் தாக்கம், இதிலும் எதிரொலித்தது.

கனடா புள்ளி விபர அறிக்கை படி,  மே மாதத்தில் 3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் பொருளாதார வல்லுநர்கள் சராசரியாக 13 சதவீதம் வீழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms