கனடா கொரோனா தடுப்பூசி பெறுவதில் இடையூறு – அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Justin Trudeau
Canada COVID-19

கொரோனா தடுப்பூசி பெறுவதில் கனடா அரசு சில இடையூறுகளை சமாளித்து வருகிறது. இந்த வாரம் மட்டும் கனடா அரசு சுமார் 75 ஆயிரம் தடுப்பூசிகளை பெற்றுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பைசர் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசி மருந்துகளை விரைவில் பெற்று விநியோகிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அதிகப்படியான தடுப்பூசி மருந்துகளை விரைவில் வினியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் தகவல்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்க தடுப்பூசி மருந்தான மாடர்னா தடுப்பூசி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் , இடையூறுகளை தவிர்த்து விரைவில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு பைசர்  நிறுவனத்திடமிருந்து தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது எட்டு லட்சத்தை நெருங்கும் நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

மேலும் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவோம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும் இந்த போராட்டத்தில் கனடா நிச்சயமாக வெற்றி பெறும் என்று ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்க: பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த கனடா – உலகம் முழுக்க அதிர்வலை!