பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த கனடா – உலகம் முழுக்க அதிர்வலை!

proud boys canada
Proud Boys leader says Canadian authorities used U.S. Capitol riot as pretext for terrorism designation

உலக நாடுகளின் அமைதிக்காக ஐக்கிய நாடுகள் சபையானது நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரச்சனையை முடித்துவைக்க போராடினாலும் உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் பல்வேறு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு நாட்டு மக்களின் அமைதி சீர்குலைந்து போகின்றது.

பிரவுட் பாய்ஸ் :

கனடாவில் அதுபோன்ற பிரவுட் பாய்ஸ் என்ற குழு கனடா மக்களின் அமைதியை கிளறி வருவதால் கனடா அரசு அந்தக் குழுவினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஏற்கனவே இது போன்ற 13 குழுக்களை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு :

கனடா நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த பயங்கரவாத பட்டியலைப் பற்றியும் பயங்கரவாத குழுக்களை பற்றியும் விரிவான விளக்க உரையை அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு சில நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதாவது பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களில் உள்ள பயங்கரவாதிகளின் சொத்துகள் கனடா அரசால் உடனடியாக முடக்கப்படும்.

மேலும் பயங்கரவாத குழுக்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கு குற்றவியல் பிரிவில் தடை விதிக்கப்படும்.

இதனோடு மட்டுமின்றி கருத்தியல் ரீதியாக தீவிரவாதம் பயங்கரவாதம் போன்றவற்றை ஊக்குவிப்பவர்களுக்கு  கனடா அரசு தக்க தண்டனை அளிக்கும் என்பதையும் அறிவித்துள்ளார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முதல் கட்ட நகர்வாக இந்த நடவடிக்கைகள் அமையும் என்பதனையும் கனடா நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடு கனடா நாடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:  கனடாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் தடைகளா? இடையில் நடந்த சிக்கல்!