கனடாவின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image Credit - Insider
Image Credit - Insider

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடல் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், சீனா முழுவதும் வனவிலங்குகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதன் இறைச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொரோனோ வைரஸ் தாக்குதல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வுஹான் நகரம் உள்ளிட்ட சீனாவில் 12 நகரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க சீன அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சமீபத்திய கணக்கின்படி கொரோனோ வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐத் தொட்டிருக்கிறது. மேலும், வைரஸ் தாக்குதலால் 2,700 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டபோது பெய்ஜிங்கில் அதிவேகமாகப் பிரத்யேக மருத்துவமனையைச் சீனா கட்டியது. சார்ஸ் வைரஸ் தாக்குதலால் 800க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதேபோன்றதொரு மருத்துவமனையை வுஹானிலும் ஒருவாரத்தில் கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளது சீனா. இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி முதல்வாரத்தின் மத்தியில் வேலைகள் முடிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன மக்கள் வரும் 30ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை புத்தாண்டுக் கொண்டாட தயாராகி வந்தனர். இந்தநிலையில் வைரஸ் அச்சுறுத்தலால், புத்தாண்டு விடுமுறையை சீன அரசு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், கனடாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனடா பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வுஹான் மாகாணத்தில் இருந்து டொரண்டோ திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அவருக்கு வயது 50. டோரோன்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் சீரான நிலையில் உள்ளார்.

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தரவரிசை பட்டியல் – கனடாவுக்கு என்ன இடம் தெரியுமா?

கடந்த வியாழக்கிழமை சீனாவில் இருந்து கனடா திரும்பிய அந்த நபருக்கு காய்ச்சலும் மூச்சு விடுவதில் சிரமமும் இருந்துள்ளது. இதனால் அவர் 911க்கு கால் செய்து விவரங்களை தெரிவித்தார்.

உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது வீட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கு தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இவருடன் விமானத்தில் பயணித்து கனடா வந்திறங்கியோர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இவருக்கு அருகில் அமர்ந்து இருந்தவருக்கு கூட தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.