இது குறித்து தகவல் தந்தால் 100,000 டாலர் வெகுமதி – ஜூலை 20 வரை வாய்ப்பு உங்கள் வசம்!

calcury-murder-2
calcury murder case suspect

கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய கல்கரி நகர கொலைப்பற்றிய தகவல் கொடுப்போருக்கு சன்மானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக மனிதர்கள் பற்றிய  தகவல்களைக் கொடுப்பவருக்கு 100,000 டாலர் பரிசு வழங்க போலோ திட்டத்துடன் கல்கரி காவல் துறை இணைந்துள்ளது.

கல்கரி காவல்துறை சேவையாகத்தின் அறிவிப்பின் படி, இந்த கொலை 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டாலும், 24 வயதான கியர் பிரையன் கிரனாடோ என்ற மற்றொரு நபர் இது வரையில் பிடிபடவில்லை.

கல்கரியில் 2015 டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 26 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிரானடோ மற்றும் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதால், இது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று நம்பப்படுவதாக கல்கரி காவல் துறை சேவையகம் தெரிவித்தது.

இந்த வழக்கில் முக்கிய மைல்கல்லாக கல்கரி கிரைம் ஸ்டாப்பர்களின் ஒத்துழைப்புடன், போலோ திட்டம் என்ற பெயரில்  100,000 டாலர்கள் வரை வெகுமதியை காவல் துறை வழங்குகிறது.

இந்த சந்தேக நபரை மனிதரை கைது செய்ய வழி வகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் பொது மக்கள் அநாமதேயமாக உரிமை கோரலாம் என்று காவல்துறை வெளியீடு தெரிவித்தது.

இந்த வெகுமதி 2021 ஜூலை 20 வரை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கொலை வழக்கில் காவல் துறையின் இந்த அறிவிப்பு நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க:

கனடாவில் சிக்கலில் சிக்கிய பிரபல பன்னாட்டு நிறுவனங்கள்! கொரோனா தாக்கத்தால் நேர்ந்த கதி?