கனடாவில் சிக்கலில் சிக்கிய பிரபல பன்னாட்டு நிறுவனங்கள்! கொரோனா தாக்கத்தால் நேர்ந்த கதி?

A

கோவிட் விதி மீறிய வால்மார்ட், கோஸ்ட்கோ, ஷாப்பர்ஸ் டிரக் மார்ட்டுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஊழியர்களின் முறையற்ற முகக்கவச பயன்பாடு,  நிறுவன துப்புரவு மற்றும் கிருமிநாசினி இல்லாமை மற்றும் சோதனை வரிசையில் உடல் ரீதியாக விலகி இருக்கத் தவறியது போன்ற கொரோனா மீறல்களுக்காக கடந்த வாரம் அபராதம் விதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் பட்டியலில் ஐந்து வால்மார்ட் இடங்கள் மற்றும் ஒரு காஸ்ட்கோ ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் 880 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. மொத்தத்தில், ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை 1,928 ஆய்வுகள் நடந்தன. இதில் 45 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐந்து ஷாப்பர்ஸ் ட்ரக் மார்ட் இருப்பிடங்களும், சுய சோதனைக்குப் பயன்படுத்தச் சுத்தப்படுத்தவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டன.

பல மளிகைக் கடைகளிலும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் ஃபுட் பேசிக்ஸ், ஃப்ரெஷ்கோ, நோ ஃப்ரில்ஸ் மற்றும் சோபீஸ் ஆகியவை அடங்கும்.

கனடாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை கடந்து, மூன்றாவது அலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், கொரோனா விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிகிறது.

இதில் மேற்கண்ட நிறுவனங்கள் அரசின் உத்தரவை மீறி, அஜாக்கிரதையாக செயல்பட்டதன் காரணமாக அபராதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க:

விமான பயணம் தொடர்பில் முக்கிய முடிவை அறிவித்த கனடா!