கனடாவை அண்மித்த பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் திரிபு!

COVID19
COVID19 Canada

கனடாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின்னர் ஒன்டாரியோ பகுதியில் குறைந்த கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது 847 புதிய தொற்றுகளும் 10 இறப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தன. ஆனால் இதற்கு முன்பு ஒன்டாரியோ பதிவுசெய்யப்பட்ட ஏழு நாட்களில் சராசரி வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு 1357 ஆக இருந்தது. நேற்று ஒன்டாரியோ பகுதியில் இங்கிலாந்தில் உருவாகிய வைரஸ் திரிபுகளினால் 308 பேரும், தென்னாப்பிரிக்கா பகுதியில் உருவாக்கிய வைரஸ் தொற்று திரிபுகளினால் ஆறு பேரும் மற்றும் பிரேசில் நாட்டில் உருமாறிய வைரஸ் திரிபுகளினால் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் மொத்தம் நேற்று மட்டும் 2,606 தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஒன்டாரியோ பகுதியில் 847 பேரும், கியூபெக் பகுதியில் 800 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 427 பேரும், அல்பேட்டா பகுதியில் 277 பேரும், சகட்ஸ்வானில் 104 பேரும், மனிடோபாவில் 76 பேரும் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் ஒன்டாரியோ பகுதியில் 10, கியூபெக் பகுதியில் 14, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13, அல்பேட்டா பகுதியில் 7, சகட்ஸ்வானில் 5 என்ற அளவில்  மரணங்கள் பதிவாகியுள்ளன.

கனடாவில் இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 182 தொற்றுகள் மற்றும் 21,435 மரணங்கள் பதிவாகியுள்ளன. 776761 பேரும் இதுவரை சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க: கனடாவை அதிர வைக்கும் தமிழர்களின் எழுச்சி! பலமான சமூகமாக உருவெடுத்த முன்னெடுப்பு!