கனடாவை அதிர வைக்கும் தமிழர்களின் எழுச்சி! பலமான சமூகமாக உருவெடுத்த முன்னெடுப்பு!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

கனடாவின் தலைநகரான ஒட்டாவா பகுதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆணையத்திற்கு முன்பாக தமிழர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கனடாவின் நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகன பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினரால், இலங்கை ஸ்தானிகர் ஆணையத்திற்கு முன்பாகவும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டொரண்டோவில் இருந்தும் மொன்றியலில் இருந்தும் நேற்று காலை ஆரம்பமானது. காலையில் ஆரம்பித்த பேரணி மாலையில் ஒட்டாவா நகரில் நிறைவடைந்தது.

பேரணியில் 100க்கும் மேற்பட்ட அதிகமான வாகனங்கள் டொரன்டோ மொன்றியல் மற்றும் ஒட்டாவா நகரில் இருந்து பங்கேற்றுள்ளன.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தும்  கோரிக்கையாக பேரணி நடைபெற்றது.

இதற்கிடையில், வைரஸ் தொற்றின் பரவலுக்கு மத்திய பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மாட்டேன் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜாக் மிக்சிங் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கேள்வி நேரத்தில் இந்த உறுதி மொழியினை முன்வைத்தார்.

இதேபோன்ற உறுதியினை கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வால் வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், தனது கவனம் வைரஸ் பரவல் இருக்கவும், கனடா மக்களை மீட்டெடுப்பதற்கு சிறந்த வழியை மேற்கொள்ளவும் கவனம் செலுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: இரண்டு வாரங்களாவது மூட வேண்டி வரும்! மார்ச் 9 வரை கனடாவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நகரங்கள்!