கனடாவில் அல்பர்ட்டா நகரில் திருடிய காருக்குள் அயர்ந்து தூங்கிய திருடர்கள்!

RCMP
An Alberta RCMP Traffic member was conducting traffic enforcement on Highway 11

அக்டோபர் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை , நெடுஞ்சாலையின் ஓரத்தில் திருடப்பட்ட வாகனத்தில் 20 வயதான இரண்டு இளைஞர்கள் தூங்குவதைக் கண்டதாக அல்பர்டா Royal Canadian Mounted Police ( RCMP ) தெரிவித்தனர்.

Royal Canadian Mounted Police Alberta முகநூல் பதிவின்படி, சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் Rocky Mountain House  அருகே நெடுஞ்சாலை 11இல் கண்டுபிடிக்கப்பட்டது.

An Alberta RCMP Traffic member was conducting traffic enforcement on Highway 11 west of #RockyMountainHouse, when he…

Posted by Royal Canadian Mounted Police in Alberta on Tuesday, 6 October 2020

ஓட்டுநரின் பக்க பின்புற இருக்கை கதவு திறந்திருந்தது. ஒரு ஜோடி கால்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்தன என்று நேரில் கண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிகாரி வாகனத்தின் நெம்பர் பிளேட்டை பார்த்தபோது, அவை திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

இரண்டு திருடர்களும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாரி வாகனத்தின் சாவியை வெளியே எடுத்து உதவிக்கு அழைத்தார்.

ஓட்டுநர் இறுதியில் தானே எழுந்தார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆனால், மற்றொரு இளைஞன் அதிகாரிகளால் தூக்கத்தில் இருந்து விழிக்க வைக்கப்பட்டார்.

இருவர் மீதும் திருடப்பட்ட சொத்தை வைத்திருத்தல் மற்றும் திருடப்பட்ட சொத்தின் கீழ் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இறுதியில் எட்மோண்டனில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வாகனம் திருடப்பட்டதாக கணிப்பொறி விசாரணை ஒன்றில் தெரியவந்தது. 5000 டாலருக்கு மேல் திருடப்பட்ட சொத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படியுங்க: கனடாவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 5 Calgary விமானங்கள்! 14 நாட்களில் நடந்த அதிர்ச்சிகர மாற்றம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.