செய்திகள்

கனடாவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 5 Calgary விமானங்கள்! 14 நாட்களில் நடந்த அதிர்ச்சிகர மாற்றம்!

Calgary
5 Flights From Calgary With Covid 19

Calgary : அக்டோபர் 5 திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனா பாதித்த நோயாளிகளுடன் பயணித்ததாக ஐந்து கால்கரி விமானங்கள் கடந்த 14 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஐந்து விமானங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும் அடங்கும்.

உங்களுக்கு எந்த நேரத்திலும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் பொது சுகாதார அதிகாரத்தை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனடா பொது சுகாதாரத்துறை கூற்றுப்படி, கொரோனா பரவியதாக சுட்டிக்காட்டப்பட்ட விமானங்களில் “கிராண்ட் ப்ரேயரிலிருந்து புறப்பட்ட வெஸ்ட்ஜெட் விமானம் (WS3178), ரொறன்ரோவிலிருந்து புறப்பட்ட வெஸ்ட்ஜெட் விமானம் (WS665) மற்றும் ரொறன்ரோவிலிருந்து (AC133) புறப்பட்ட ஒரு ஏர் கனடா விமானம் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 26 அன்று ரொறன்ரோவிலிருந்து வந்த வெஸ்ட்ஜெட் விமானத்தில் இருக்கை வரிசைகள்  18 முதல் 23 வரையிலான வரிசைகளை, பாதிக்கப்பட்ட வரிசைகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரொறன்ரோவிலிருந்து வந்த ஏர் கனடா விமானம் செப்டம்பர் 24 ஆம் தேதி தரையிறங்கியது.

அதில் இருக்கை வரிசைகள் 19 முதல் 25 வரையிலான வரிசைகள் இந்த விமானத்திற்கான பாதிக்கப்பட்ட வரிசைகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

கிராண்ட் ப்ரைரி விமானத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எந்த இருக்கை வரிசைகளும் பட்டியலிடவில்லை. இது செப்டம்பர் 24 ஆம் தேதி தரையிறங்கியது.

கொரோனா தொற்றுகளுடன் கல்கரியிலிருந்து புறப்பட்ட விமானங்களில் ரொறன்ரோவுக்கு புறப்பட்ட  வெஸ்ட்ஜெட் மற்றும் ஏர் கனடா விமானம் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 24 ஆம் தேதி மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே விமானங்கள் புறப்பட்டன. வெஸ்ட்ஜெட் விமானத்தில் பாதிக்கப்பட்ட இருக்கை வரிசைகள் தெரியவில்லை. ஏர் கனடாவில் 27 முதல் 33 வரை பாதிக்கப்பட்ட வரிசைகள் என்று பட்டியலிட்டுள்ளது.

இதையும் படியுங்க: மோசடியா? கனடாவில் அவசர கால கொரோனா நிதியுதவியை திருப்பியளித்த 830,000 பேர்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Related posts

பதிலடிக்கு நேரமில்லை; கொரோனா தொற்று அதிகரிப்பு – கனடா லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Web Desk

வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் -கனடாவில் இந்திய வம்சாவளியினர் மீது இனவெறி தாக்குதல்!

Editor

Ye Jianhui: நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை விதித்து சீனா உத்தரவு!

Editor