மோசடியா? கனடாவில் அவசர கால கொரோனா நிதியுதவியை திருப்பியளித்த 830,000 பேர்!

CERB
Canadians have made more than 830,000 repayments of COVID-19 emergency aid benefits

கனடாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்த மக்களுக்காக, Canada emergency response benefit (CERB) எனப்படும் அவசர கால கொரோனா நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் நிதியுதவி பெற்ற 830,000-க்கும் அதிகமானோர், தாங்கள் பெற்ற நிதியை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

Canada emergency response benefit திட்டத்தில் அவசர அவசரமாக நிதி உதவி வழங்கப்பட்டதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

Canada Revenue Agency அளித்த தகவலின்படி, நிதியை திருப்பிக் கொடுத்த அனைவருமே, தாமாக முன் வந்தே கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

Canada Revenue Agency செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

இப்படி பயனாளர்கள் தாமாகவே முன்வந்து நிதியைத் திருப்பிக் கொடுத்ததற்கு பல காரணங்கள் உள்ளது என்கிறார்.

ஒரே காலகட்டத்தில் இரு இடங்களில் தவறுதலாக விண்ணப்பித்தவர்கள், தாங்கள் இந்த நிதி உதவி பெற தகுதியற்றவர்கள் என பின்னர் தெரியவந்தவர்கள், அல்லது எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பணிக்குத் திரும்பிவிட்டவர்கள் என பல காரணங்களால் தாங்கள் பெற்ற நிதியை பயனர்கள் திருப்பிக்கொடுத்துவிட்டார்கள் என்கிறார்.

ஆனால், பலர் மோசடி செய்து இந்த நிதியுதவியை பெற்றதாக தங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்ட ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த தகவல்கள் உண்மைதானா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் Canada Revenue Agency தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் COVID-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளுக்கு

மத்திய அரசு கூடுதல் ஆதரவை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க: கனடா எட்மண்டன் நகரில் குதிரையாக மாறிய 17 வயது பெண்! தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் வீடியோ!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.