கனடிய பொருளாதாரத்தில் பெரும் வேலை இழப்பு – இதுவரை இல்லாத சிக்கலை எதிர்கொள்ளப் போகும் மக்கள்!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

கடந்த மாதம் கனேடிய பொருளாதாரம் 2 லட்சத்து 13 ஆயிரம் வேலைகளை இழந்துள்ளதாக கனடிய குழு விவரம் துணைக்குழு தெரிவித்துள்ளது.

வேலை இழப்பு பற்றி இன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது வேலை இழப்பு விகிதம் உயர்ந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் வேலைவாய்ப்பு இழப்பு மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மாதம் வேலை இழந்தவர்களின் விகிதமானது 0.6% உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

இது மொத்தமாக 9.4 சதவிகிதம் உயர்ந்து உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. ஒன்டாரியோ மற்றும் கியூபிக் திலும் அனேகமான வேலைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் பதிவிட்டு உள்ளது.

கனடிய பொருளாதாரம் இவ்வாறு அதிகமான விதத்தில் வேலைவாய்ப்புகளை இழந்தது ஒரு வீழ்ச்சியை சந்தித்ததாக கருதப்படுகின்றது.

மேலும் கனடிய அரசு இதனை மேம்படுத்திக்கொள்ள மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கனடிய குழு விவரம் தெரிவித்துள்ளது.

பல நாட்டு மக்களும் கனடாவில் குடியேறும் இச்சூழ்நிலையில் கனடாவின் வேலைகளை இழப்பு விகிதம்உயர்ந்துள்ளது.

அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றிஏற்கனவே கனடாவில் குடியேறிய மற்றும் குடியேறப் போகும்பிற நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏனெனில் கனடா உலகின் பல நாடுகளில் இருந்து வரும் பல நாட்டு மக்களுக்கும் சிறப்பான ஆதரவை அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மையே.

இருப்பினும் கனடா பொருளாதாரம் வேலை இழப்பு விகிதாச்சாரம் உயர்வு எதன் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் என்பதை ஆராய்ந்து வீழ்ச்சியை முறியடிக்க வேண்டிய கட்டாய நிலையில் கனடா அரசு உள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் தமிழர்களுக்காக எதிரொலித்த குரல்! சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் இனம்!