கனடாவில் தமிழர்களுக்காக எதிரொலித்த குரல்! சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் இனம்!

Gari
Canada Supports Srilankan Tamils

கனடா அரசு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இன்றுவரையிலும் ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில் கனடா அரசு ஈழத்தமிழர்களுக்காக கனடாவில் உள்ள டொரண்டோவில் கருப்புக்கொடி ஏந்தி ஊர்தி பவனி நடத்தி வருகிறது. கனடிய அரசு தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவு பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம்.

இலங்கையில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடிய அரசு இந்த ஊர்தி பவனியை ஆதரித்து உள்ளது.

கனடாவின் மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வின் போது கார்போரட்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 73வது சுதந்திர நாளில் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதியை கேட்கும் பாணியில் இந்த ஊர்தி பவனி டொரண்டோவில் நடைபெற்று வருகிறது .

கரி ஆனந்தசங்கரி இலங்கையின் இன வெறி தாக்குதலில் உயிர்தப்பி எல்லோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் எதிர்த்துப் போராடும் போராட்டத்திற்கு அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை தீவில் தமிழர்கள் சமாதானம் அமைதி பற்றி உறுதிசெய்ய சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறார்.

இலங்கையின் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலுக்கு எதிராக கனடா அரசு ஆதரவு தெரிவிப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தமிழர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் துக்க தினம் என்று அறிவித்து டொரண்டோவில் ஊர்திகளில் கருப்புக்கொடி கட்டி பவனி வந்தது மட்டுமின்றி கனடாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக வாசலில் கருப்புக்கொடி தொங்கவிட்டு தமிழர்களுக்கான ஆதரவையும் கவன ஈர்ப்பையும் கனடா அரசு செய்துள்ளது.

இதையும் படியுங்க: கனடா கொரோனா தடுப்பூசி பெறுவதில் இடையூறு – அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?