கனடாவில் CERB திட்டத்தில் இப்படியொரு மோசடி நடந்துள்ளதா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

CERB
Canadian Prime Minister Justin Trudeau speaks during a Covid-19 pandemic briefing from Rideau Cottage in Ottawa on November 20, 2020. (Photo by Lars Hagberg / AFP)

CERB எனப்படும் கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் கனடிய சுயதொழில் செய்பவர்கள் உதவித்தொகையை பெற்றிருந்தனர்.

இந்த உதவித்தொகை யானது குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு கனடா அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது .

தற்பொழுது இந்த தொகையானது வரையறுக்கப்பட்ட தகுதிகளை மீறி வரையறுக்கப்பட்ட தகுதி பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

கனடாவில் சுய தொழில் செய்து வரும் கனடிய மக்களுக்கு இந்தத் தொகையானது கனடா அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் இந்தத் தொகையானது சரியான முறையில் சுயதொழில் செய்பவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கின்றன.

இருப்பினும் வரையறையை மீறி சில சுய தொழில் செய்பவர்களும் இந்த தொகையை பெற்றுள்ளனர் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

எனினும் கனடா அரசாங்கம் சுயதொழில் செய்து வருபவர்கள் அந்தத் தொகையை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்க படமாட்டார்கள் என்று கனடிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடிய வருமான தளத்தில் தெளிவற்ற தகவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

CERB தடுப்பு உணர்வுகளில் 14 ஆயிரம் டாலர்கள் வரை பெற்ற சுயதொழில் செய்யும் கனடியர்கள் ஏனைய நிபந்தனைகளை நிவர்த்தி செய்தால், அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை தனது செய்தியாளர் சந்திப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: டொரண்டோவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு இது சரியான நேரம் அல்ல