டொரண்டோவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு இது சரியான நேரம் அல்ல

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

கனடாவில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலரும் சுகமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கனடாவில் இதுவரைஏழு லட்சத்து 44 ஆயிரத்து 72 பேர்சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கனடாவில் இதுவரை 20 ஆயிரத்து 863 இறப்புகள் பதிவாகியுள்ளன. கனடாவின் மொத்த நோய்த்தொற்றுகள், உயிரிழப்புகள் மற்றும் சுகமடைந்து வீடு திரும்புபவர்கள் என எண்ணிக்கை பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கனடாவின் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளை பிராந்தியங்கள் ஆக பிரித்துள்ளனர்.

இந்த பிராந்தியங்களின் அடிப்படையில் தொற்றின் கட்டுப்பாடுகள் படிநிலையின் வரிசையில் தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒன்டாரியோ பகுதியில் பிராந்தியத்தின் அடிப்படையில் 13 பாடசாலைகள் இன்று முதல் நேரடி வகுப்புகளுக்கு ஆயத்தமாகி விட்டன. பாடசாலைகளில் மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு இன்று செல்ல தயார் நிலையில் இருக்கின்றனர்.

டுரான்,ஹால்டன்,வின்சர் உள்ளடக்கிய பதிமூன்று பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. வடக்கு ஒன்டாரியோவில் ஏற்கனவே நேரடி வகுப்பு பாடசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் 16 ஆம் தேதி வரை டோரன்டோ யோக் வில் ஆகிய மூன்று பகுதிகளிலும் நேரடி வகுப்பிற்கு தடை உள்ளது.

டொரண்டோவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்து வதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதனையும் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் நோய்த்தொற்றின் 3 உருமாறிய திரிபுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இக்கருத்தை தெரிவித்துள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார். முதல்கட்ட தொற்றினை விட பிறகு வந்துள்ள இரண்டு திரிபுகளும் வெகு விரைவில் பரவும் தன்மை உள்ளதால் கட்டுப்பாடுகள் ரத்து செய்ய கூடாது என்பதனையும் தெரிவித்துள்ளார்.

டொரண்டோவில் இங்கிலாந்தின் திரிபால் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக பதிவாகியுள்ளன.

இதையும் படியுங்க: கனடாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில், இன்னும் எதிர்கொள்ளப்படும் சிக்கல்!