கொரோனா பரவி வரும் நேரத்தில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் புதுவித நோய் எச்சரிக்கை!

Polio
Polio Alert Canada

கொரோனா தொற்று பரவி வரும் இந்த நேரத்தில், போலியோ (Polio) போன்ற நோய் வருவது தொடர்பாக, பெற்றோர்களுக்கு கனடா சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலியோ நோயானது சிறு குழந்தைகளுக்கு நீண்டகாலம் முடக்கி விடும். இதுவே கொரோனா தொற்று நோயால், போலியோ பாதிப்பு மேலும் சிக்கலாகிவிடும் என்று சுகாதார அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்.

இந்த நிலை Acute flaccid myelitis என்று அழைக்கப்படுகிறது.

இது பல ஆண்டுகளாக குறைந்த அளவில் உள்ளது என்றாலும், கொரோனா பரவி வரும் இந்த சூழலில் தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தில் இருக்கும். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கடைசியாக இதன் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்கனவே அமெரிக்காவில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Acute flaccid myelitis  என்பது ஒரு பக்கவாத நிலையாகும். இது பெரும்பாலும் போலியோ போன்ற நோய்கள் சார்ந்த நிலை என்று விவரிக்கப்படுகிறது.

Immigration : கனடாவில் வேலை என்று சொல்லி அரங்கேறும் மோசடி! வெளிநாட்டு மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

இது முதலில் முதுகெலும்பில் வீக்கமாக ஆரம்பித்து, பிறகு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கால்களில் திடீரென பலவீனத்தை ஏற்ப்படுத்தும்.

என்டோ வைரஸ்கள் அல்லது வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் ஆட்டோ நோயெதிர்ப்பு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளால் போலியோ நோய் ஏற்படலாம்.

இதன் இறுதி கட்டத்தில் கடுமையான சுவாசக் கோளாறு உண்டாகும். நிலை தீவிரமாகும் போது வென்டிலேட்டரின் பயன்பாடு தேவைப்படுகிறது.

சில குழந்தைகள் விரைவாக குணமடைகிறார்கள் என்றாலும், மற்றவர்கள் நீண்டகால பக்கவாதம் மற்றும் தசை பலவீனத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms