Immigration : கனடாவில் வேலை என்று சொல்லி அரங்கேறும் மோசடி! வெளிநாட்டு மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

Immigration
Canada Immigration Scam

கனடா இம்மிகிரேசன் (Immigration) என்ற பெயரில் சில அமைப்புகள் மோசடியில் ஈடுபடுவதால் வெளி நாட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

உலகின் பிற நாடுகளில் இருந்து, கனடாவிற்கு புலம் பெயர விரும்பும் மக்களை,  கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி சில அமைப்புகள் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, வேலை தேடுவோர், வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறும் நிறுவனங்களின் பின்புலத்தை கவனத்துடன்  விசாரித்து செயல் படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் சில அமைப்புகள், புலம்பெயர்தல் ஆலோசனை மையங்கள் இந்த மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,

முதலில் கனடாவில் வேலை வாங்கித் தருவோர் என கூறிக்கொண்டு தங்களை அணுகியதாக தெரிவிக்கும் அவர்கள், கட்டுமானப் பணியில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

உண்மையான ஒரு நிறுவனம் நடத்தும் நேர்காணல் போலவே நேர்காணல் நடத்தி தங்களை கையாண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முதல் கட்ட நேர்காணல் முதாலானவை முடிந்ததும், புலம்பெயர்தல் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டதாகவும், கூடுதலாக சில ஆவணங்களை நிரப்பும் படி கோரப்பட்டதாகவும், அதற்குப் பின் பணம் அனுப்பும்படி கோரப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எப்படியாவது கனடாவிற்கு சென்றாக வேண்டும் என்ற நோக்கில் அவர்களை அணுகும் மக்கள் வலையில் சிக்கிக்கொள்வது தெரியவந்துள்ளது.

ஆகவே, கனடாவில் வேலை தேடும் வெளிநாட்டவர்கள் இத்தகைய மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா சூழ்நிலையில் இந்த மோசடி பன்மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CERB : வேலையை இழந்த கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு! அதிரடி காட்டும் மத்திய அரசு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms