இயல்பு நிலைக்கு மீண்டு வர திணறும் கனடா! உருமாறிய கொரோனா வைரஸ் திரிபுகள் குறித்த அச்சம்!

coronacase
People pass by a hospital emergency in Toronto on Wednesday, November 18, 2020. THE CANADIAN PRESS/Frank Gunn

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் வைரஸ் தொற்று பரவுதல் முடிவுக்கு வராமல் இருக்கிறது

உருமாறிய கொரோனா வைரஸ் திரிபுகள் மக்களிடையே பயங்கரமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்துறை, கல்வித்துறை போன்று சில துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் வழி நடத்தினாலும் வைரஸ் தொற்று பரவுதல் கட்டுக்குள் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இன்று கனடாவில் 2388 புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை கனடாவில் 8 லட்சத்து 30 ஆயிரம் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன.

ஒன்ராறியோவில் 904 பேரும், கியூபெக்கில் 669 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 302 பேரும், அல்பேட்டா பகுதியில் 263 பேரும் ச ஸ்கெட்ச் வானில் 106 பேரும், மணிதொபா பகுதியில் 96 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்டாரியோவில் 13 பேரும், கியூபெக் பகுதியில் 20 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 26 பேரும், அல்பேட்டா பகுதியில் ஒன்பது பேரும், சாஸ்கெட்ச்வானில் மூன்று பேரும் வைரஸ் தொற்று பாதிப்பினால் மரணித்துள்ளனர் என்று பதிவாகியுள்ளன.

இதுவரை 21 ஆயிரத்து 397 பேர் மரணித்துள்ளனர் என்று பதிவாகியுள்ளன. மேலும் 7 லட்சத்து 70 ஆயிரத்து 808 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடாவில் கடுமையான காலநிலை மற்றும் பனி மழை பெய்து வருவதால் பாடசாலைகள் செல்பவர்கள் செல்ல இயலவில்லை.

கனடா முழுவதும் உறைபனி மற்றும் கடுமையான பனி மழை விடாது பெய்து வருவதால் இயல்பு நிலையை அடைய இயலாது மக்கள் திணறி வருகின்றனர்