ஒன்டாரியோவில் மிகப் பெரிய பூங்கா “Celebration common – டாக் போர்டு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.

UK COVID-19
Two cases of UK COVID-19 variant confirmed in Ontario

ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மாகாணத்தின் சில பகுதிகளை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை கூறினார். பெரிய சாகச பூங்கா, புதுப்பிக்கப்பட்ட கச்சேரி அரங்குகள் மற்றும் உள்ளக ஸ்பா போன்றவற்றை சேர்த்து வருடம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ஒன்டாரியோ இடங்களை மாற்றியமைப்பதற்கு மூன்று தனியார் துறை நிறுவனங்களை டாக் போர்டு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.

ஒரு முறை டொரன்டோ நகரில் உள்ள நீர் முனைக்கு (waterfront) வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்தார்கள். திடீரென மக்களின் வருகை குறைந்து பொருளாதார நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 2012ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
155 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா மற்றும் வாட்டர் பிரண்ட் போன்ற திட்டங்கள் பல வருடங்களாக மாகாண அரசாங்கத்திடம் உள்ளன.

சமீப காலத்தில், முந்தைய லிபரல் அரசாங்கம் “celebration common” என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய பூங்கா ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை தொடங்கியது. மேலும் பூங்காவை திட்டமிட்டு வடிவமைக்க நிறுவனத்தைத் தேர்வு செய்தது.

வடிவமைப்பு எப்படி இருக்கும் என்ற விளக்கங்களை அரசாங்கம் வெளியிட்டது.ஆனால் முதல்வர் டாக் போர்ட் திட்டங்களை ரத்து செய்து அந்தப் பகுதியை உருவாக்குவதற்காக தற்பொழுது தனியார் துறை நிறுவனங்களை தேர்வு செய்துள்ளார்.

  • Austrian resort developer therme
  • Quebec outdoor recreation frim Ecorecreo
  • Live nation
    போன்ற நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

9000 மூடப்பட்ட இருக்கைகள் புதுப்பிக்கப்பட்ட Amphetheatre -ல் உருவாக்கப்படும். மறு வடிவமைப்பின் இறுதிப்பகுதி ஆனது லைவ் நேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன