தொழிலாளர் தினத்தை ஒன்டாரியோவில் செலவழிக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,எரின் மற்றும் ஜக்மீட்

jagmeet labourday

கனடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் மூன்று கட்சித் தலைவர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் களமிறங்குகின்றனர். கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களையும் அறிவிக்கின்றனர்.

இன்றைய தேர்தல் பிரச்சாரம் சற்று மாறுபட்டதாகவுமும் வித்தியாசமாகவும் அமையும். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அணிவகுப்புகள் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் Covid-19 வைரஸ் தொற்று காரணமாக அணிவகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .

தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தொழிலாளர்கள் சீராக அணிவகுத்து செல்வார்கள். இந்த வருடம் தொற்று நோய் பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர்களுக்கு பதிலாக மூன்று கட்சியின் தலைவர்களும் ஒன்டாரியோ முழுவதும் பரவியுள்ளனர்.

தொழிலாளர் தினத்தை ஒட்டி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன . திங்கட்கிழமை டொரன்டோ நகரில் 24C அளவிற்கு வெப்பநிலையை எதிர்பார்க்கலாம் என்று சுற்றுச்சூழல் கனடா கூறியது. மேலும் தொழிலாளர் தினமன்று அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் ,மளிகைக் கடைகள் மற்றும் நூலகங்கள் போன்றவை மூடப்பட்டது.

டொரன்டோ மிருகக்காட்சிசாலை, கனடாவின் ஒண்டர் லேண்ட், ஒன்ராறியோவின் கலைக்கூடம், CN கோபுரம் ,போன்றவை இயங்குகின்றன. பெரும்பான்மையான உணவு விடுதிகள், பார்கள், ஒரு சில வணிக வளாகங்கள், போன்றவை இயங்குகிறது.

  • Yorkdale Mall
  • Eaton centre
  • Sherway gardens
  • Farview mall
  • Scarborough town centre

போன்றவை தொழிலாளர் தினத்தையொட்டி திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.