இந்தியா பதிலடி – இ-விசாவிற்கு விண்ணப்பிக்கும் பயணிகள்

canadian in india rescue roca covid 19

கனடிய அரசாங்கம் Covid-19 வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வைக்கப்பட்டிருந்த விமானசேவை தடையை நீக்கி இருந்தது. இந்தியாவில் covid-19 வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கனடிய அரசாங்கம் நீக்கியது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் படிப்படியாக தளர்த்தியுள்ளது. இருப்பினும் இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கத்தின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கனடிய பயணிகளுக்கான இ-விசா வசதியை இடைநிறுத்தம் செய்துள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் தொற்று வழக்குகளின் உயர்வு காரணமாக கனடிய அரசாங்கம் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தது.பின்னர் இந்தியாவில் வைரஸ் தொற்று வழக்குகள் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து கனடிய அரசாங்கம் நேரடி விமானங்களுக்கு அனுமதி அளித்த போதிலும் மீண்டும் செப்டம்பர் மாதம் டெல்லி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு சோதனை முறையை அறிமுகப்படுத்தியது

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா விசா வழங்குவதில் நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசா மூலம், நவம்பர் 15 முதல் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்குள் நுழையலாம் என்று இந்தியா அறிவித்திருந்தது.

இந்தியா விசாக்கள் வழங்குவதற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பட்டியலில் கனடாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டுகளை கொண்டிருப்பவர்களை போன்ற சிலரைத் தவிர்த்து மற்ற எல்லா நாட்டினரும் இ- விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.