சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம் – பயண ஆலோசனைகளை வழங்கும் கனடிய அரசாங்கம்

Toronto
An almost-empty Terminal 3 is shown at Pearson International Airport in Toronto, Friday, March 13, 2020

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் covid-19 வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கனடிய அரசாங்கம் தடை விதித்திருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் covid-19 வைரஸ் தொற்று கணிசமாக குறைவதை தொடர்ந்து சர்வதேச பயணங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தடையை நீக்கி அறிவித்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து பெற்றுக்கொள்ளாமல் சர்வதேச பயணத்திற்கு தயாராகுவதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு கனடா அறிவுறுத்தியுள்ளது.

கனடிய அரசாங்கம் மக்களுக்குக் கூறும் வழிகாட்டுதல்கள் :

  • மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.
  • முடிந்த அளவு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
  • தொற்றுநோய் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
  • அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகளை ஆலோசனை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
  • கடல்வழி பயணங்களுக்கும் தெளிவான ஆலோசனை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.கப்பல் போக்குவரத்தின் கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும்.

கனடியர்கள் பயணம் செய்வதற்கு முன்பு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டுமென்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

கனடியர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தல் ,முகக்கவசம் அணிதல் போன்ற தனிச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிற நாடுகளில் உள்ள கனடியர்கள் covid-19 வைரஸ் தொற்றின் செயல்பாட்டை உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தை பார்த்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.