சர்வதேச பயணத்திற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் – கனடிய அரசாங்கம்

Canada

கனடாவில் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் குறித்த திட்டங்களை மத்திய அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கனடாவின் பொது சுகாதார அமைப்பு மற்றும் கனடா எல்லை சேவை அமைப்பு போன்ற துறைகளின் தொழில்நுட்ப விளக்கத்தை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நிதி அமைச்சர் ஃப்ரீலான்ட் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசினர்

சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாத இறுதியில் covid-19 சோதனையின் எதிர்மறையான முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். விமானம்,கப்பல் மற்றும் ரயில் போன்ற அனைத்து போக்குவரத்திலும் தடுப்பூசி ஆவணங்கள் கனடிய பயணிகளுக்கு தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Covid-19 வைரஸ் தொற்று கணிசமாக குறைவதை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் சர்வதேச பயணிகளுக்காக எல்லைகளை திறந்துள்ளது. மாகாண தடுப்பூசி ரசீதுகள் மூலம் சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கப்படும்

அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் முழுமையாக covid-19 தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லையில் அனுமதி அளித்துள்ளன.