ட்ரூடோவின் அமைச்சரவையில் மாற்றங்கள் – சந்திக்கும் முயற்சியில் மாகாண முதல்வர்கள்

Justin Trudeau
Canada COVID-19

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிதாக அமைச்சரவையை நியமித்துள்ளார். அமைச்சரவையில் கூடுதலாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மனநலம் மற்றும் போதைப் பழக்கம் குறித்த வாக்குறுதிகளை சமாளிக்க புதிய அமைச்சர் பதவி நியமிக்கப்பட்டுள்ளது

கரோலின் பென்னட் மனநலம் மற்றும் போதை பழக்கம் இலாகாவின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் மனநல பராமரிப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கூடுதல் கவனம் செலுத்துவதை கனடிய மனநல சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் பாராட்டியுள்ளனர்

Covid-19 தொற்று நோய் காலத்தில் நாட்டு மக்களிடையே மனச்சோர்வு மற்றும் பதட்டங்கள் அதிகரித்துள்ளன

கனடாவின் மனநல ஆணையத்தின் தலைவர் மைக்கேல் ரோட்ரிக் “கனடிய மக்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பணி நியமனம் முக்கியமானதாக அமையும்” என்று கூறினார்

மாகாணங்களின் முதல்வர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்த தயாராகின்றனர். மாகாணங்களின் சுகாதார பாதுகாப்பு செலவீனங்களை 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்

பெரும்பாலான மூத்த அமைச்சர்களை புதிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மூன்று அமைச்சர்களை நீக்கம் செய்து 9 புதுமுகங்களை பதவியில் நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.