தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை – ஒன்ராறியோவில் அறிவிப்பு

Zain Chagla
Zain Chagla

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. முழுமையாக covid-19 தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொள்ளாதவர்கள் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தால் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றும் பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு வெவ்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று ஒன்டாரியோ அரசாங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் :

Covid-19 தடுப்பு ஊசி போட்டு கொள்ளாதவர்களாக இருந்தால் சுய தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு covid-19 பரிசோதனையை எடுக்க வேண்டும். பரிசோதனை நேர்மறை அல்லது எதிர்மறையான முடிவுகளை வழங்குவதை பொருட்படுத்தாமல் அவர்கள் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தல் நாட்களில் ஏழாவது நாளன்று மீண்டும் ஒரு முறை covid-19 பரிசோதனை செய்ய வேண்டும்.

Covid-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்கள் , covid-19 வைரஸ் தொற்றின் அறிகுறிகளை அனுபவித்தால் பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெற்றால் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டு பின்னர் வெளியேறலாம். பரிசோதனையில் நேர்மையான முடிவுகளை பெற்றால் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே குடும்பத்தில் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால் covid-19 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு வெளிப்படும்போது அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்