உயர்த்தப்பட்ட ஊதியம் – ஒன்ராரியோ மாகாணத்தில் $15 ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ள டக் போர்டு

DOUG FORD
DOUG FORD

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு $1.45 ஆக உள்ளது. ஒன்டாரியோவின் முன்னாள் முதல்வர் கேத்லின் வைன் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக $15 டாலர்களாக உயர்த்துவதற்கு 2019 ஆம் ஆண்டில் திட்டமிட்டிருந்தார்.

முற்போக்கு பழமைவாதிகள் கட்சியினர் இந்தத் திட்டத்தை பல்வேறு காரணங்களால் கைவிட்டனர். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்படும் பணவீக்க விகிதத்தினால் மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் உயரும் என்று கூறியிருந்தனர்.

தற்போதைய முதல்வர் டக் போர்ட் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஒன்ராரியோ மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $15 ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $15 ஆக உயர்த்துவதற்கு டக் போர்டு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்தி ஊடகங்கள் திங்கள்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ட்ரியா, குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $15 போதுமான ஊதியமாக இல்லை என்றும் ,குறைந்தபட்ச ஊதியத்தை போர்டு அரசாங்கம் இன்னும் உயர்த்த வேண்டுமென்றும் கூறினார்.

ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் வணிகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது என்று CFIB கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பின் ஒன்டாரியோ மாகாணத்தின் செயல்பாடுகளுக்கான மூத்த இயக்குனர் ரியன் மால்லோ கூறினார்.