முதல்வர் டக் போர்ட் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்படவில்லை – 20 சதவீத வருமான வரி குறைப்பு

doug_ford
After new modelling data showed the current wave could continue into summer if nothing changes

ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கணிசமாக குறைந்துள்ளன. மாகாணத்தின் குடியிருப்பாளர்கள் குறைந்தபட்சம் முதல்கட்ட தடுப்பூசியை பெரும்பான்மையான அளவில் போட்டுக் கொண்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்று புதிய நிலைக்கு செல்வதை திங்கள் கிழமை உரையின்போது எலிசபெத் டவுட்ஸ்டெல் தெரிவித்தார். “ஒன்டாரியோ மாகாணத்தில் எதிர்காலத்தில் ஊரடங்கு மூடுதல்களை தவிர்ப்பது இறுதி இலக்காகும்” என்று கூறினார்.

ஒரு புதிய சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்தையும், அடுத்த மாகண தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை எட்டு மாதங்களுக்கு முன்பு முன்வைக்கும் வாய்ப்பை குறிக்கும் விதமாக முதல்வர் டக் போர்டின் உரையை எலிசபெத் டவுட்ஸ்டெல் நிகழ்த்தினார்.

நிகழ்த்தப்பட்ட உரையில் Covid-19 வைரஸ் தொற்று பரவலின் போது நீண்ட கால பராமரிப்பு அமைப்பு மற்றும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கு மாகாண அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தியது .நீண்ட கால பராமரிப்பு சேவைகளை நிறுவுவதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை குறிப்பிட்டது.

Covid-19 வைரஸ் தொற்று சற்று அதிகரித்து கூடுதலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் உள்ளூர்மயமாக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எலிசபெத் கூறினார். மேலும் ஒன்ராரியோ மாகாணத்தில் அதிகளவிலான தடுப்பூசி விகிதங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

86 சதவீதத்துக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வர் டக் போர்டு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வருமான வரியை 20 சதவிகிதம் குறைப்பது வாக்குறுதியாகும்.