12 வயது மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசி மருந்து – NACI ஆய்வறிக்கை

Anti-Microbe
Health Canada Just Recalled 'Anti-Microbe' Hand Sanitizers That Were Given Out In Schools

கனடா முழுவதும் covid-19 தடுப்பூசி மருந்துகள் இரண்டு தவணையாக விநியோகிக்கப்படுகின்றன. வயதுவரம்பு பொருத்து தடுப்பூசி மருந்து வகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில் 12 முதல் 17 வயதுடைய இளைஞர்களுக்கு இரண்டாவது கட்ட தடுப்பூசி மருந்து மாடர்னா தடுப்பூசி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹெல்த் கனடா அறிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு 2020, டிசம்பர் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி மருந்துகள் குறித்த பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 12 முதல் 17 வயதுடைய இளைஞர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை என்று ஹெல்த் கனடா தீர்மானம் செய்து ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்தில் இளம் பருவத்தினருக்கு பைசர் பயோ டெக் தடுப்பூசி மருந்து அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மாடர்னா மற்றும் பைசர் பயோ டெக் ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகளும் இளைஞர்களுக்கு covid-19 வைரஸ் தொற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கும் என்று NACI அமைப்பு கூறியது.

 

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாடர்னா mRna மற்றும் பைசர் பயோடெக் வகை covid-19 தடுப்பூசி மருந்துகள் சிறந்த பலனை அளிப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று NACI தெரிவித்தது.

பாடசாலைகளுக்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Covid-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்று தகவல்கள் வெளியாகின்றன.ஒன்டாரியோவின் குடியிருப்பாளர்கள் 12 முதல் 17 வயது உடையவர்களில் 61% பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .73 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

17.3 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசி மருந்துகளும், 7.6 மில்லியனுக்கும் அதிகமான மாடர்னா தடுப்பு ஊசி மருந்துகளும் ஒன்டாரியோ மாகாணத்திற்கு இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.