கனடாவில் மாடர்னா தயாரிப்பு ஆலை – ஒப்பந்தத்தில் கையெழுத்து

Moderna
The storage requirements of the Moderna vaccine, just approved by Health Canada, are less onerous than those required for Pfizer-BioNTech's vaccine. (Dado Ruvic/Reuters)

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மருந்துகள் அமெரிக்க நிறுவனமான மாடர்னாவிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது. மாடர்னா நிறுவனம் கனடாவில் mRna தடுப்பூசி மருந்து தயாரிக்கும் ஆலையை தொடங்குவதாக உறுதியளித்து கனடா அரசாங்கத்திடம் ஆலை உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கனடாவில் mRna தயாரிப்பதற்கு கடந்த மூன்று மாதங்களில் ஒட்டாவா செய்த பெரிய ஒப்பந்தம் ஆகும். அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சல் மோன்ட்ரியலில் இன்று காலை மத்திய அமைச்சர் பிரான்கோயிஸ் – பிலிப் ஷாம்பெயின் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.

மாடர்னா மருந்து தயாரிப்பு ஆலைக்கு மத்திய அரசாங்கம் எவ்வளவு பங்களிப்பு செலுத்தும், ஆலை எங்கு கட்டப்படும் மற்றும் எப்போது கட்டப்படும் என்பது தொடர்பான விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்ராரியோ மாகாணத்தின் மிசிசாகா பகுதியிலுள்ள ரேசிலியன்ஸ் டெக்னாலஜிசுக்கு 199 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தது.கனடாவில் தற்பொழுது வரை எந்த ஒரு covid-19 தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படவில்லை.

Covid-19 தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பல நாடுகளின் பல்வேறு நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் சிலர் கனடாவிலிருந்து சென்றவர்கள் . கனடாவிலிருந்து அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு விஞ்ஞானிகள் ஈர்க்கப்பட்டனர். அங்கு அறிவியல் மற்றும் உயிரியல் வளர்ச்சி செழித்து வளர்ந்தன.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கனடாவில் பெரிய வணிக உற்பத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையான மூலதனங்களை அவர் கொண்டுள்ளார்.

Covid-19 சிகிச்சை மற்றும் தடுப்பூசி மருந்துகளுக்கு 600 மில்லியன் டாலர்கள் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.