ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜோ பைடன் உரையாடல் – நில எல்லை கட்டுப்பாடுகளில் ஒத்துழைப்பு

Justin Trudeau
canada says PM Justin Trudeau

விவாதம் செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன் ஆகிய இருவரும் திங்கட்கிழமை அன்று அழைப்பு வாயிலாக உரையாடினர்கனடா மற்றும் அமெரிக்கா எல்லைகள் பகிரப்பட்ட பின்பு முதல்முறையாக இரண்டு வட அமெரிக்க தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தது மிகவும் உற்சாகம் அளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் G7 மாநாட்டின் போது இரண்டு நாடுகளின் தலைவர்களும் உரையாடியதாக தகவல்கள் கூறுகின்றன.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடாவின் அரையிறுதி கால்பந்து போட்டியில் கனடா அணி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவிப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

கனடா – அமெரிக்கா எல்லைகள் பற்றி தகவல்கள் வெளியிடப்படவில்லை. முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அடுத்த வாரம் முதல் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.

நில எல்லை தொடர்பாக ஒத்துழைப்பு :

ட்ரூடோ மற்றும் பைடன் ஆகிய இருவரும் நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றின் நிலவரத்தைப் பற்றி விவாதம் செய்தனர் .மேலும் கனடா மற்றும் அமெரிக்கா நில எல்லை விவகாரத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிக்க ஒப்புக்கொண்டனர்.

அமெரிக்காவிற்குள் நுழையும் கனடாவின் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவில்லை எனினும் அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகளை கண்காணித்து பராமரிப்பதற்கு முடிவு எடுத்துள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாட்டினை அமெரிக்காவின் பொருளாதார பங்காளியாக மாற்றினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க நிறுவனங்கள், வாணிபம் போன்றவற்றிற்கு கனடாவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து பைடன் சிறந்த தீர்வாக கருதுவதாக கூறப்படுகிறது.