இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பயனர்கள் -கனடிய அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கைகள்

fb insta
fb insta

சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் முன்னாள் ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கனடிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுவதற்கு தூண்டுதலாக அமையும் என்று கனடாவின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆன்லைன் வலைத்தளங்களுக்கு எதிராக போராடும் மக்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் தரவு பொறியாளராக பணியாற்றிய அமெரிக்காவின் பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் குறித்த திடுக்கிடும் சாட்சியங்களை செவ்வாய்க்கிழமை அமெரிக்க செனட்டர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார் .” குழந்தைகளுக்கு தீமை விளைவிக்கும் வகையில் பிரிவினைகளை தூண்டி நமது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் தயாரிப்புகளை செயல்படுத்துகிறது ” என்ற பிரான்சிஸ் கூறினார்.

பேஸ்புக் நிறுவனம் தனது லாபத்தை இலக்காக வைத்து பயனர்களின் தரவுகளை பாதுகாக்கத் தவறி செயல்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

கனடாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த லிபரல் அரசாங்கம் சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பேச்சுகளை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. லிபரல் கட்சியின் முன்னாள் எம்பி கேத்தரின் பிரான்சிஸ் வெளியிட்ட தரவுகளின்படி ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வெறுக்கத்தக்க உள்ளடக்கங்கள் கொண்ட தயாரிப்புகளால் பயனாளர்களின் பாதுகாப்பை காப்பதற்கு தவறிவிட்டது என்று கூறினார்.

லிபரல் கட்சி தனது முதல் 100 நாட்களில் வெறுக்கத்தக்க உள்ளடக்கங்களை எதிர்த்து புதிய சட்டங்களை உருவாக்குவதாக உறுதி அளித்து இருந்தது. கனடாவின் பாரம்பரிய அமைச்சர் ஸ்டீவன் கில்பில்ட் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கான அணுகல் வழிமுறைகளை மாற்றியமைப்பதற்கான திட்டத்தைக் குறிப்பிடவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன