Flu காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியில் முதியவர்களுக்கு முன்னுரிமை – சுகாதார அமைச்சகம்

Theresa Tam
Wear mask is safest — Canada’s top doctor advises

ஒன்டாரியோ மாகாணத்தின் துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சரான கிறிஸ்டின் எலியட் , இந்த ஆண்டு சுமார் 90 மில்லியன் டாலர்களை ஃப்ளூ தொற்றுக்கு எதிரான 7.6 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வாங்குவதற்கு மாகாண அரசாங்கம் செலவிடுவதாக கூறினார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஃப்ளூ தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்குகிறது.

மாகாணம் கடந்த ஆண்டை விட ஒரு மில்லியன் டோஸ் அதிகமாக பெற்றுக் கொள்ள இருக்கிறது. இந்த வருடம் சுமார் 1.4 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் அதிகமாக வாங்குகிறது என்று கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார் .

அடுத்த மாதம் முதல் அனைத்து ஒன்டாரியோ மக்களுக்கும் flu தடுப்பூசி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஒன்டாரியோ மாகாணம் அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் மூத்த வயதுடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், ஆறு மாதங்கள் முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் உடல்நிலையில் அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்படும். மூத்த வயதுடையவர்களுக்காக சுமார் 1.8 மில்லியன் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்டின் எலியட் கூறினார்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அதேவேளையில் முதல் அல்லது இரண்டாவது covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுகொள்ளலாம் என்று எலியட் அறிவுறுத்தினார்.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் ” இன்ஃப்ளூயன்சா நிச்சயமாக அழிவை ஏற்படுத்தும் ஆண்டு அல்ல ” என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நவம்பர் மாதம் காய்ச்சல் தடுப்பூசிகள் பெறப்படும்.எனவே ,ஒன்டாரியோ மக்கள் பொறுமையாக இருக்கும்படி எலியட் அறிவுறுத்தியுள்ளார்.