விவாதத்தின்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதில் – போராட்டத்தை நிறுத்த வேண்டும்

commons debate liberal ndp conservative

COVID-19 ஆணைகளை எதிர்த்து கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நாடாளுமன்றத்தை சுற்றி நிறுத்தியுள்ளனர். இதனால் ஒட்டாவாவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் போக்குவரத்து நெரிசல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கனடாவின் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் போராட்டக்காரர்களின் வணிக ட்ரக் உரிமங்களை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஃபோர்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவாவில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.மேலும் போராட்டம் தொடர்பான வேறு எந்த புதிய நடவடிக்கைகளையும் அவர் அறிவிக்கவில்லை.

போராட்ட சூழ்நிலையில் மாகாணம் நகரத்திற்கு தேவையான வளங்களுடன் மத்திய அரசு இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஹவுஸ் ஆப் காமண்சின் சபாநாயகர் அந்தோணி போராட்டம் குறித்த அவசர விவாதம் திங்கள் கிழமை நடத்துவதற்கு NDP தலைவர் ஜக்மீத் சிங்கின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

விவாதத்தின் ஆரம்பத்தில் ” உலகெங்கிலும் உள்ள மக்கள் தலைநகர் ஒட்டாவாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறார்கள் ,என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள் ” என்று என்டிபி கட்சியின் தலைவர் பேசினார். Freedom Convoy போராட்டம் ஒரு அமைதியான போராட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Covid-19 கட்டுப்பாடுகள் மூலம் நாடு முழுவதும் சத்தம் மற்றும் பிளவுகளை தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.