மருத்துவமனைகளில் சேவைகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் – மருத்துவர் கீரன் மூர்

corona
Vaccine Corona

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் தகுதியுள்ள கனடியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. அத்தியாவசியமற்ற இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையே தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் போடுவதை கட்டாயம் ஆக்குவதற்கு டக் போர்ட் அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று ஒன்டாரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டின் எலியட் குயின்ஸ் பூங்காவில் வியாழக்கிழமை அன்று தடுப்பூசி மருந்து குறித்து கருத்து தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதார பணியாளர்கள் தங்களது பணியில் இருக்கும் வரை covid-19 பரிசோதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடப்படாத சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து covid-19 பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் covid-19 தொடர்பான கல்வியில் பங்கேற்க வேண்டும் என்று ஒன்டாரியோ அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் பெற்றுக் கொள்பவர்களின் விகிதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர் கீரன் மூர் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்களின் விகிதம் வருத்தமளிப்பதாக கூறினார்.

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாகவும், நோயாளிகளை பராமரிப்பதற்கு தக்க முறையில் கௌரவப்படுத்த படுவார்கள் என்றும் தெரிவித்தார்.