ஆப்கானிஸ்தானில் சிக்கிய கனடியர்கள் – குற்ற உணர்ச்சியில் இருப்பதாக தெரிவித்த ஜெனரல்

air canada
air canada

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் ராணுவ படைகளின் மூலம் தனது நாட்டு மக்களை வெளியேற்றி வருகின்றன.

தாலிபான்களின் அச்சுறுத்தும் தாக்குதலைக் கண்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு சில நாடுகள் அடைக்கலம் தருவதாக அறிவித்துள்ளன.

கனடாவிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு துருப்புகளை அனுப்பி அங்குள்ள கனடிய மொழிபெயர்ப்பாளர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் போன்றவர்களின் குடும்பங்களை பாதுகாப்பான முறையில் கனடாவிற்கு கொண்டுவந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் கனடாவின் ராணுவ பணி வியாழக்கிழமை காலை முடிவடைந்தது.அங்கிருந்து பெரும்பான்மையான பணியாளர்கள் புறப்பட்டனர்.இருப்பினும் சில கனடியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அங்கு சிக்கியுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பணியாளர்களின் செயல் தலைவர் ஜெனரல். வெயின் இரே கடைசியாக காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது சில கனடியர்கள் இருந்ததாக தெரிவித்தார். மேலும் ராணுவ வீரர்கள் தனிப்பட்ட முறையில் திரும்ப முயற்சித்தும் சில கனடிய மக்களை விட்டுச் செல்ல நேர்ந்தது குற்ற உணர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரை 3,700 கனடியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டு கனடாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் , கனடாவின் ராணுவ படைகள் சிறப்பாக செயல்பட்டதாகவும் ஜெனரல் கூறினார்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கடந்த புதன்கிழமை இரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கனடாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவற்றில் பாதி அமெரிக்கர்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. சில கனடியர்கள் குடும்பத்தை வெளியேற்ற முடியாததால் குற்ற உணர்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.