ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அனைத்து நாடுகளும் உதவ வேண்டும் – G7 தலைவர்களைச் சந்திக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

trudeau
Generations of Asian Canadians helped build Canada

ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி தாலிபன் அதிகாரத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வாழும் பிற நாட்டு மக்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு குடியேற்றம் செய்வதற்காக பல்வேறு நாடுகள் துருப்புகளை அனுப்பி உள்ளது. விமான நிலையத்தில் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு துருப்புக்கள் உதவுகின்றன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ராணுவ உறுதிப்பாட்டை விரிவாக்கம் செய்வது குறித்து G7 உச்சி மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் ஆகஸ்ட் 31 என்ற காலக்கெடுவை நீட்டிப்பதற்கு அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன் மற்ற தலைவர்களிடமிருந்து அழைப்புகளை எதிர் கொள்வார் என்று கூறப்படுகிறது. ஜி7 கூட்டம் மெய்நிகர் வாயிலாக இன்று நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானின் நெருக்கடி நிலையை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மெய்நிகர் கூட்டத்தில் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாமில்டன் பகுதியில் கூட்டாட்சி கட்சியின் பிரச்சாரத்தின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஆப்கானிய மக்களுக்கான திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு முடிந்தவரை பாதுகாப்பான முறையில் உதவுவது குறித்த விவாதத்தை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

தாலிபான்களின் பயங்கரவாதத்தை எதிர் கொள்ளும் மக்களை வெளியேற்றுவதில் முயற்சி செய்து வரும் சில நட்பு நாடுகளின் வரிசையில் கனடாவும் ஒன்றாகும். தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்க ராணுவ படைகள் நிறுத்தப்பட்டுள்ளது

உச்சி மாநாட்டை நடத்தும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இமானுவேல் மாக்ரோன் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் தவிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான கால நீட்டிப்பு குறித்து தாலிபான்களிடம் கோரிக்கை வைக்கின்றனர்.