G20 மாநாடு: இந்திய நிதியமைச்சருடன் கனடா நிதியமைச்சர் விவாதம்!

Chrystia Freeland

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் சிங்கப்பூரின் நிதியமைச்சர்களான கிரிஸ்டியா பிரீலேண்ட் மற்றும் லாரன்ஸ் ஓங் ஆகியோரை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்தார். சந்திப்பின்போது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றின் ஒத்துழைப்பு குறித்து விவாதம் செய்தார்.

ரோமில் G20 உச்சி மாநாடு நடைபெற்றது. G20 கூட்டு சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சர்களின் கூட்டத்தின்போது கனடிய துணைப்பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டியா மற்றும் சிங்கப்பூரின் நிதி அமைச்சர் லாரன்ஸ் ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார் .

கனடிய துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் கிரிஸ்டியா உடன் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபாட்டுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

கிலோபல் ஃபண்ட் நிர்வாக இயக்குனர் பீட்டரை சந்தித்த நிர்மலா சீதாராமன் எய்ட்ஸ் ,மலேரியா மற்றும் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் (global fund) குளோபல் ஃபண்ட் நிர்வாகத்தின் முயற்சிகள் குறித்து பாராட்டியுள்ளார்.

இத்தாலிய பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களின் முதல் G20 உச்சி மாநாடு இதுவாகும்.உலகளாவிய சுகாதார மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அறிக்கையில் அமைச்சர்கள் ஒப்புதல் கையெழுத்திட்டனர்.

இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான பொருளாதாரம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் மற்றும் கிரிஸ்டியா மிகுந்த ஈடுபாட்டுடன் விவாதம் செய்துள்ளனர்.